Monday, May 11, 2015

ஆரோக்கியமான வாழ்க்கையும் - ஊட்டச்சத்து கூடுதல் உணவுகளின் அவசியமும்

ஒருவருடைய உணவில் உள்ள குறைகளை நிரப்ப, ஊட்டச்சத்து கூடுதல் உணவுகளை எடுத்துக் கொள்வது எல்லா வயதினருக்கும் பாதுகாப்பானது மற்றும் ஒவ்வொருவருக்கும் பின்வரும் விதத்தில் நன்மை தரக்கூடியது.


  1. குழந்தைகள்: அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அவர்களுடைய வளர்ச்சிக்குத் தேவை. குழந்தைகள் நீண்ட நேரம் படிக்க வேண்டியிருப்பதால் ஞாபக சக்தியை அதிகரிக்கவும், வெளியில் அதிகம் விளையாடவும் ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் உதவுகின்றன. ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் நோய்தடுப்பு சக்தியை வளர்க்க உதவுகின்றன மற்றும் அவர்களுடைய ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றன.
  2. இளைஞர்கள்: அதிக மன அழுத்தத்தை சமாளிக்க இவர்களுக்கு சக்தியும், வலிமையும் தேவை. ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் உடல், மன மற்றும் உணர்ச்சி மாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ளும் போது எதிர்த்துப் போராட அவர்களுக்கு உதவுகிறது.
  3. உழைக்கும் வர்க்கத்தினர்: பிசியான வேலை மற்றும் குடும்ப கடமைகள், மன அழுத்தம் மற்றும் நேரடி போட்டி ஆகியன எந்நேரமும் அவர்களை ஓடிக்கொண்டே இருக்கச் செய்கின்றன. இயல்பான ஆரோக்கிய வாழ்வு வாழ உடலின் திறனை களைக்கச் செய்கின்றன. ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், ஆரோக்கியமாக இருக்கவும் அவர்களுக்கு உதவுகிறது.
  4. நடுத்தர வயதுடையவர்கள்: வயதாகும் போது, அன்றாட செயல்பாடுகளைச் செய்வதில் உடலின் சக்தியளவும் குறையத் தொடங்குகிறது. ஒழுங்கற்ற வாழ்க்கை முறையும் இதனுடன் சேர்ந்து கொள்ளும் போது, உடலுக்கு புத்துணர்வளிக்க தினமும் கூடுதல் உணவுகளை குறிப்பிடத்தகுந்த அளவில் எடுத்துக் கொள்வது இன்னும் அவசியமாகிறது. ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமங்களின் குறையை நிவர்த்தி செய்கின்றன.
  5. முதியவர்கள்: முதிர்ந்த வயதை ஒருவர் அடைந்ததும், உடலின் அமைப்பு முறைகள் குறிப்பாக செரிமான முறை மெத்தனமடைகிறது. அதோடு பல்வேறு ஊட்டச்சத்துக்களும் குறைகின்றன. அதனால் ஒருவர் எளிய வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. உடல் தனது வலிமையைத் திரும்பப் பெறவும், ஆரோக்கியமான வாழ்வை வாழவும், சுதந்திரத்தைத் தூண்டவும் ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் உதவுகின்றன.
  6. கருவுற்ற மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள்: கருவுற்ற மற்றும் தாய்ப்பாலுட்டும் பெண்களுக்கு, அவர்களுக்காகவும், அவர்களுடைய குழந்தைகளுக்காகவும் அளிக்க ஊட்டச்சத்துக்கள் கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் மிக அவசியம். ஏனெனில் உடலுக்கு கால்சியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவற்றிற்கான தேவை அதிகமாக இருக்கும்.

Copyright © 2014 Vayalveli | The Best Organic Shop